தமிழகத்தில் 5 நாள் மழை நீடிக்கும்

76பார்த்தது
தமிழகத்தில் 5 நாள் மழை நீடிக்கும்
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கேரளாவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களில் உள்ள அருவிகளில் நீர் கொட்டி வருகிறது. இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி