ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

சென்னை: மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

மெரினா கடற்கரையில் பாலம் அமைப்பதை எதிர்த்து, சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு. பாரதி கூறுகையில், "மெரினா கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறுவது, கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை கடற்கரையில் பாலம் அமைப்பது ஆகியவற்றால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதை எதிர்த்தும், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நொச்சிக்குப்பம், டுமீங்குப்பம், அந்தோணியார்புரம், பவானி குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்" என்று தெரிவித்தார்.

சென்னை