ஆவடி - Aavadi

திருவள்ளூர்: ரேக்ளா குதிரை பந்தயம், மகளிருக்கான கபடி போட்டி

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் ரேக்ளாகுதிரை பந்தயம், மகளிருக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆவடி சா. மு. நாசர் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் ரேக்ளா குதிரை பந்தயம் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் புல்லரம்பாக்கம் பகுதியில் இருந்து ஒதப்பை, பூண்டி, நெய்வேலி கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகள் வரை, சிறிய குதிரைகள், நடுத்தர குதிரைகள், பெரிய குதிரைகள் என 3 வகையான குதிரைகளுக்கு 3 பிரிவுகளின் கீழ் 16 கி. மீ, 14 கி. மீ, 12 கி. மீ என பந்தய தூரம் நிர்ணயித்து பந்தயம் நடைபெற்றது. சென்னை, ஆவடி, திருவள்ளூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 47 குதிரைகள் இந்த பந்தயத்தில் பங்கேற்றிருந்தன. மகளிருக்கான கபடி போட்டியை அமைச்சர் சா. மு. நாசர் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார். கபடி போட்டியில் சென்னை, பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றிருந்தன. ரேக்ளா குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த குதிரைகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையும், அதேபோல் மகளிருக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా