திருச்சி: புளியஞ்சோலையில் குளிக்க தடை.. வனத்துறை அதிரடி..வீடியோ

60பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை ஆற்றில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இங்கே திருச்சி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுற்றுலாத்தலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். 

இந்நிலையில் புளியஞ்சோலை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியான கொல்லிமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக புளியஞ்சோலை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு அதிகமாக வந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் புளியஞ்சோலை ஆற்றில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து குறையும்பட்சத்தில் குளிப்பதற்கான தடை நீக்கப்படும் என்றும், அதுவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கும் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி