அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் 12 இடங்களில் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100 நாள் வேலை உறுதி திட்ட ரூபாய். 4000 கோடி தமிழ்நாட்டுக்கு தராமல் உள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியம் சார்பில் ஆர் எஸ் மாத்தூர் கிராமத்தில் செந்துறைவடக்குஒன்றிய செயலாளர் எழில்மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்தவர்களுக்குஅல்லது உடனடியாக பணம் வழங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.