அரியலூர்: மானியத்தில் பம்பு செட்டுகளுக்கு ரிமோட் கருவி
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல்வெளிகளுக்கு உள்ள பம்பு செட்டுகளை இயக்க செல்லும் பொழுது பல்வேறு பாதிப்புகள் உள்ளாகின்றன. இதை தவிர்க்கும் வகையில் விவசாயிகள் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.