இன்றைய ராசிபலன் (11-11-2023)
மேஷம்: பொருளாதார விஷயங்களில் இன்று வழக்கத்தை விட சிறப்பாக அமையும். முக்கியமான திட்டங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். எந்த செயலையும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். வியாபார முயற்சிகள் சாதகமாக அமையும். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். ரிஷபம்: வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு பழைய முதலீட்டில் இருந்து லாபம் வந்து சேரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சிகள் வெற்றியாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனைவியுடம் பிடிவாதத்தை தவிர்த்து பாசத்தை காட்டுவீர்கள். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வீர்கள். மிதுனம்: பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நன்மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். கடகம்: லாபத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும், விரும்பிய அளவு பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் நீங்களே முதல் முயற்சி எடுத்து முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட வேலை சிறப்பாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். புதிய நபர்களின் சந்திப்பதில் கவனமாக இருக்கவும். சிம்மம்: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு அதனால் சங்கடம் ஏற்படும். வரவை விட செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்படும். சிலர் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியிருக்கும். புதிய நபரால் குடும்பத்தில் பிரச்சனை தலைதூக்கும். விருப்பங்கள் நிறைவேறுவதில் தடை வரும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் திடீர் நஷ்டம் வரலாம். கன்னி: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியம் நிறைவேறும். நிதி நிலையில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பீர்கள். உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் அமையும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். துலாம்: தடைபட்ட பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடக்கவும். உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உறவினர்களால் சிக்கல் உண்டாகும். விருச்சிகம்: நண்பர்கள் உதவியால் நினைத்த காரியம் நடந்து முடியும். புதிய நபர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைகளை தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் இருந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும். வீடு, மனை போன்ற புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும். தனுசு: பொருளாதாரத்தில் இன்று நெருக்கடிகள் இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர்கள். எந்த செயல்களிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பண உதவி கிடைக்கும். சிலர் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மகரம்: தொழிலில் லாபம் பெறுவதற்கான நாள் இன்று. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து நன்மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். வாழ்க்கையில் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். கடன் வாங்குவதை தவிர்க்கவும். கும்பம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும். எந்த செயல்களிலும் தடுமாற்றமும் குழப்பமும் உண்டாகும். எதிர்பார்த்த விஷயம் ஏமாற்றத்தை தரும். திடீர் நெருக்கடிகளால் சங்கடம் வரும். திட்டமிட்ட செயலில் ஈடுபட முடியாமல் போகும். பணியிடத்தில் சகஊழியர்களிடம் தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். வாகன பயணத்தின் போது அவசரம் காட்ட வேண்டாம். மீனம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் சில சங்கடங்கள் வரும். கவனமுடன் செயல்படவும். எதிர்பாலினத்தவரால் பிரச்னைகளை சந்திக்க நேரும். தந்தைவழி உறுப்பினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். பணியிடத்தில் பிறர் வேலையில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.