ஐடி பெண் ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது

3126பார்த்தது
ஐடி பெண் ஊழியர் உள்ளிட்ட 2 பேர் கைது
கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உறவுக்கார பெண் ஒருவர், எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கும், அந்த மாணவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மாணவியை பழிவாங்க ஐ.டி. ஊழியர், திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், தனது நண்பரான தொண்டாமுத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பருடன் சேர்ந்து, மருத்துவ மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றினார். இதனால் அதிச்சியடைந்த மாணவி, கோவை சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து, இளம்பெண், அவரது நண்பர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.