மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்களின் இன்றைய அணுகுமுறையில் சிறிது கவனம் தேவை. உங்கள் பிரியமானவர்களுடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்குமுன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவை. சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விஷயங்கள் சாதகமாக இருக்கும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமாக நல்ல நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக ஆற்ற வேண்டும். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம்.
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காணப்படும் பதட்டத்தை சமாளிக்க சமநிலையான அணுகுமுறை வேண்டும். திருதியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையைளிக்கும் நாளாக இருக்கும். அமைதியாக இருப்பது சிறந்தது. ஆசிரியர்கள் பங்களிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல்களையும் பெறலாம். தாய் அல்லது சொந்தக்காரர்கள் உடல் வலியை அனுபவிப்பார்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு உங்கள் மனதில் ஏற்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். திரைப்படம் மற்றும் சீரியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்காது. உங்களிடம் காணப்படும் உறுதியின் காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பிறருடன் சிறப்பாக தொடர்பு கொள்வீர்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமநிலையோடு இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று திருப்தியான நாளாக இருக்கும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பேச்சில் கவனம் தேவை. ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டல், இறைவழிபாடு போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் இன்று ஆறுதல் கிடைக்கும். இன்று நண்பர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள்.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எளிய பணிகளைச் செய்வது கூட கடினமாக உணர்வீர்கள். உங்கள் ஆற்றல் இழந்து காணப்படுவீர்கள். இதனால் விளைவுகளில் பாதிப்பு ஏற்படும். ஓய்வாக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று சமநிலையோடு காணப்படுவீர்கள். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பிறருடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும்.
மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். நீங்கள் மிகுந்த முயற்சி செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.