மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்றைய நாளை சாதகமாக்கிக் கொள்ள நீங்கள் மிகவும் முயற்சி எடுப்பீர்கள். உங்கள் மனது அமைதியாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாய்ப்புகள் தேடிவர வாய்ப்புள்ளது.
ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஒரு சாதகமான நல்ல நாள். இன்று அமைதியான மனநிலையுடன் காணப்படுவதால் முக்கிய
முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். இன்று மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நன்மையை அளிக்கும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை.
மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியங்கள் குறைந்து காணப்படும். இன்று சில பொறுப்புகளை உங்களால் செய்ய முடியாமல் போகலாம். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம்.
கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலைகள் ஏற்படும். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள்.
சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள் உங்கள் நலன் பெருகும். இன்று பயணங்கள் காணப்படும். ஆசிரியர்கள் பங்களிப்பாளர்களிடமிருந்து ஒப்புதல்களையும் பெறலாம். தாய் அல்லது சொந்தக்காரர்கள் உடல் வலியை அனுபவிப்பார்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கன்னி: இந்த ராசிக்காரர்கள் இன்று அதிர்ஷ்டங்களை சந்திப்பீர்கள். பணியின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் சிறந்த பணி காரணமாக
பதவி உயர்விற்கான வாய்ப்பு உள்ளது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும்.
துலாம்: இந்த ராசிக்காரர்கள் இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. உங்கள் சகபணியாளர்கள் மற்றும் கீழ்பணிபுரிபவர்களின் ஆதரவு உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மற்றும் நற்பெயர் கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள்.
விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றையநாள் சமநிலையுடன் காணப்படும். உங்கள் அணுகுமுறை மூலம் நீங்கள் புதிய தொடர்புகளை பெறுவீர்கள். இன்றைய பணியின் மூலம் நீங்கள் நற்பலன்களைப் பெறுவீர்கள். இது உங்கள் தகுதியை நிரூபித்துக் காட்டும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எதிர்பாராத மாற்றங்கள நிகழும். முயற்சிகளை சார்ந்து செயல்படுவது நல்லது. பணியிடத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். விரும்பி பணியாற்றுவீர்கள். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அன்பும் ஆர்வமும் நிறைந்திருக்கும். நல்ல பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். விளையாட்டில் நேரத்தை கழியுங்கள்.வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு
வேலை கிடைக்க சாதகமான நேரம்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான முறையில் செயலாற்ற உங்களுக்கு பொறுமையும் உறுதியும் தேவை. பணி செய்வதற்கான திறமை உங்களிடம் காணப்படும் போதிலும் சிறந்த திட்டமிடல் இல்லாத காரணத்தால் அதனை நீங்கள் வெளிப்படுத்த இயலாது. எனவே கவனமாக பணியாற்ற வேண்டும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள்.
மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். சுய வளர்ச்சிக்காக தொடர்ந்து முயன்றால் இன்று வெற்றிகரமான நாளாக ஆக்கலாம். பணியில் பலன்கள் கலந்து காணப்படும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். மேலதிகாரிகள் மற்றும் சகபணியாளர்களுடன் உறவாடும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.