இன்றைய ராசிபலன் 24-10-23

57865பார்த்தது
இன்றைய ராசிபலன் 24-10-23
மேஷம்

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. மக்கள் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளும் கனவுகளும் ஏற்படுத்துவார்கள் - ஆனால் உங்கள் சொந்த முயற்சியை வைத்தே அவை அமையும்.

ரிஷபம்

உங்கள் நல்ல வகையில் உணரச் செய்யக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு அற்புதமான நாள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்ப விவகாரங்கள் ஸ்மூத்தாக போகும் போல தெரிகிறது. உங்கள் திட்டங்களுக்கு எதிர்பார்த்தபடி ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்

இன்று, உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் நல்ல ஆரோக்கியம் காரணமாக, இன்று உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம்.

கடகம்

ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். உங்கள் பிள்ளை காரணமாக பொருளாதார நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பை இன்று நீங்கள் காண்கிறீர்கள். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும்.

சிம்மம்

நண்பர்கள் ஆதரவு அளித்து அங்களை மகிழ்விப்பார்கள். இன்று பால் தொழிலுடன் தொடர்புடையவர்கள் நிதி ரீதியாக பயனடைய வாய்ப்புள்ளது. வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். சிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள்.

கன்னி

அடிக்கடி பதற்றமாவது உடலை பலவீனமாக்கும், சிந்தனை சக்தியையும் பாதிக்கும். பாசிட்டிவ் சிந்தனையுடன் நோயை விரட்ட ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். எந்த உதவியும் இல்லாமல் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும், நீங்கள் உங்களை நம்ப வேண்டும். தூரத்து உறவினரிடம் இருந்து நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த தகவல் உங்கள் குடும்பத்தினருக்கு, குறிப்பாக உங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வரும்.

துலாம்

உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார்.

விருச்சிகம்

விதியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் அதிர்ஷ்ட தேவதை ரொம்பவும் சோம்பேறி, ஒருபோதும் உங்கலிடம் வராது. ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உங்கள் எடையைக் கட்டுப்படுத்தி, மீண்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் முந்தைய கடனை இதுவரை திருப்பித் தராத உங்கள் உறவினர்களுக்கு இன்று நீங்கள் கடன் கொடுக்கக்கூடாது.

தனுசு

எல்லையில்லாத சக்தியும் மகிழ்ச்சியும் உங்களை தொற்றிக் கொள்ளும். எந்த ஒரு வாய்ப்பையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் - குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. பிறருடன் வாக்குவாதங்கள், மோதல்கள், தேவையில்லாமல் குற்றம் கண்டுபிடிக்கும் போக்கை தவிர்த்திடுங்கள்.

மகரம்

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு குடும்ப உறுப்பினரின் நோய் காரணமாக, நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கும்பம்

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். உங்களுக்கும் இன்று கணிசமான அளவு பணம் இருக்கும், அதனுடன் மன அமைதி இருக்கும். சரித்திர நினைவிடத்துக்கு ஒரு சிறிய பிக்னிக் திட்டமிடுங்கள். அது குழந்தைகளுக்கும் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வழக்கமான வாழ்வில் இருந்து விலகி இருக்கலாம் என்ற நிலையில் அதிகம் தேவைப்படும் நிவாரணத்தை தரும்.

மீனம்

உங்கள் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் தந்தையிடமிருந்து எந்தவொரு ஆலோசனையும் இன்று தொழில் துறையில் உங்களுக்கு பயனளிக்கும் உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். மனம் உடைந்து போகாதீர்கள் - தோல்விகள் இயற்கையில் சகஜம்தான், அவைதான் வாழ்வை அழகாக்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி