இன்றைய ராசிபலன் 03-11-2023

71510பார்த்தது
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகளில் மிக கவனம் தேவை. இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும். இன்று எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். உரையாடலின் போது கவனமாக இருங்கள். அதிக பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. உறவினர்களால் பிரச்சனை ஏற்படலாம். மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட வேண்டும். இதனால் இன்று உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். கடகம்: இந்த ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும். இன்று நீங்கள் செய்யும் செயல்களை சரியாக திட்டமிட்டுச் செய்தால் நீங்கள் வெற்றி காணலாம். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். மனதில் குழப்பங்களும் கவலைகளும் நிறைந்திருக்கும். இன்று சிறந்த பலன்கள் கிடைப்பதற்கு உகந்த நாள் இல்லை. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் தொழில் ரீதியாக பல போட்டிகளை சந்திக்க நேரிடும். கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நல்ல நாள். உங்களின் முயற்சி சிறியதாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். பயணங்களால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று பணியில் சவால்களும் போட்டிகளும் நிறைந்து காணப்படும். இந்த சவால்களை திறமையாக சமாளிக்க வேண்டிய நிலை காணப்படும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் பயணங்கள்மேற்கொள்ள வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் எடுத்து அதில் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பீர்கள். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாளாக அமையாது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தள்ளிப்போட வேண்டும். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தின் கவனம் கொள்ள வேண்டும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் ஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். பணியில் இன்று மும்மரமாக காணப்படுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் தரும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி