இன்றைய ராசிபலன் 07-11-2023

72963பார்த்தது
மேஷம்: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உங்கள் வாழ்வில் சில மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய துறையில் ஆர்வம் அதிகரிக்கும். போன் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிறு தூரப் பயணத்தால் மாற்றம் உண்டாகும். எதையும் செய்யும் தன்னம்பிக்கை உங்களுக்கு வரும். ரிஷபம்: கனிவான பேச்சால் பலரின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். தனவரவில் இருந்து வந்த தாமதம் விலகும். சுபகாரிய விஷயத்தில் இருந்த இழுபறி நீங்கும். மனதில் ஏதோ குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். பெற்றோர் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மிதுனம்: ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் சிந்தனை மேம்படும். நிர்வாக துறையில் தனித்தன்மை வெளிப்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். இணைய துறையில் புது வாய்ப்பு கிடைக்கும். மனதளவில் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திருமண தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போகும். கடகம்: நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வர்த்தக பணியில் விவேகத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாதத்தைத் தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நிர்வாகத்தை பொறுமையாக கையாள வேண்டும். சிம்மம்: விவேகமான செயல்பாடுகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். நண்பர்களின் எண்ணத்தை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். நெருக்கமானவர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். கன்னி: குழந்தையின் எதிர்காலம் சார்ந்த சிந்தனை மேம்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் உதவி சாதகமாகும். சங்கம் பணியில் மதிப்பு அதிகரிக்கும். வேலையால் அலைச்சல் அதிகரிக்கும். துலாம்: முயற்சியில் இருந்த தடையைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். தனவரவில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். விருச்சிகம்: குழப்பமான சிந்தனையால் செயல்பாட்டில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றி புரிதல் அதிகரிக்கும். கடன் விவகாரத்தில் பொறுமையாக இருக்கவும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். அலுவலக பணியில் பதற்றமின்றி செயல்படவும். தனுசு: உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சகோதரர் வழியில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனநிறைவை ஏற்படுத்தும். மகரம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் ஈடேறும். பெரியோர்களின் ஆலோசனை மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல் குறையும். கும்பம்: வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமாகும். வாக்குறுதி அளிப்பதற்கு முன்னர் யோசித்து செயல்படவும். மீனம்: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். எதிர்பாராத அலைச்சல் புது அனுபவத்தை அளிக்கும். வேலை மாற்றம் சார்ந்த சிந்தனை மேம்படும். வழக்கு பணியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாக்குறுதி அளிக்கும் முன்னர் கவனமாக இருக்கவும். மாணவர்களுக்கு கல்வி பணியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி