இன்றைய ராசிபலன் 23-10-2023

55389பார்த்தது
இன்றைய ராசிபலன் 23-10-2023
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று சாதகமான நல்ல நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். இன்று நீங்கள் சிறந்த திட்டங்கள் மூலம் பயன் பெறுவீர்கள். எல்லாவற்றிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல்கள் அதிகரிக்கும். வாய்ப்புள் தேடிவர ஏற்பட வாய்ப்புள்ளது. ரிஷபம்: இந்த ராசிக்காரர்கள் ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு தானங்கள் மற்றும் தொண்டு செய்ய இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் கடவுளின் ஆசியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். காரியங்களை சாதிக்க கடின உழைப்பு தேவை. மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் சில போராட்டங்கள் இருக்கும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது ஆறுதலாகவும் இருக்கும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். திருமணமாகாதவர்களின் திருமணம் குறித்து முடிவெடுக்கும் நேரம். கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொதுவாக சிறந்த நாள். நீங்கள் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும். புத்திசாலித்தனத்தை மேம்படுத்திக் கொள்வது நல்லது. எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு இருக்கும். நிலம் சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்காது. இன்று அதிக பலன்கள் எதிர்பார்க்க இயலாது. குழப்பம் நிலவும். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு உதவிகரமாக இருக்கும். குழந்தைகளின் முன்னேற்றமும் நீங்கள் எதிபார்க்கும் வகையில் இருக்காது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கன்னி: இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சற்று அனுகூலம் குறைவான நாள். இன்று நீங்கள் அதிர்ஷ்டத்தை விட உங்கள் முயற்சியை சார்ந்து செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நல்ல நாள். உங்கள் நலனை மேம்படுத்தும் சில பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். இன்று திருப்தி நிலவும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக பதட்ட நிலை காணப்படும். இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். புத்திரர்களால் உத்யோக ஆதாயம் கூடும். அரசியல்வாதிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்துவார்கள். மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. மன சஞ்சலம் காரணமாக சாதகமான விளைவுகள் காண்பதில் தடை இருக்கும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் இழக்க வாய்ப்புள்ளது. இதனால் பின் தங்கியிருப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனம் தேவை. தியானம் மேற்கொள்வதன் மூலம் கடினமான சூழ்நிலையை சமாளிக்க இயலும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். மீனம்: இந்த ராசிக்காரர்க: இன்று உங்கள் ஆற்றல் மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனது தெளிவாக இருக்கும். எனவே உங்கள் செயல்களை சிறப்பாக ஆற்றுவீர்கள். உங்களின் உறுதி காரணமாகஇன்றைய நாளை கழிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி