இன்றைய ராசிபலன் (26.10.2023)

66845பார்த்தது
மேஷம்: இன்று அலுவலகத்தில் நீங்கள் சக ஊழியர்களிடம் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக முடியலாம். உடனிருப்பவர்களால் சில சிக்கல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் அனுபவம் கிடைக்கும். பயணங்களால் மனதில் சில மாற்றம் ஏற்படும். ரிஷபம்: நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் விரிவடையும். நிர்வாக பணியில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் மீது உள்ள மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மனதில் இருந்த கவலை குறையும். செயல்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். மிதுனம்: ஆராய்ச்சி பணியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் நம்பிக்கை மேம்படும். தந்தை வழியில் அனுகூலமான சூழல் அமையும். செயல்பாடுகளில் சில மாற்றம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடகம்: நிர்வாகப் பணியில் பொறுப்பு அதிகரிக்கும். முதலீடு சம்மந்தமான ஆலோசனை கிடைக்கும். ஆன்மிக பணியில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். உடல் நலத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள். சிம்மம்: வியாபாரத்தில் விவேகத்துடன் இருக்கவும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமையாக இருக்கவும். உறவுகளிடத்தில் கருத்து வேறுபாடு வந்து போகும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். கன்னி: மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். துலாம்: விவசாயம் தொடர்பான முயற்சி சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கமானவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். கடன் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். விருச்சிகம்: பொழுதுப்போக்கு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை குறித்த சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தனுசு: வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். திருப்தியற்ற மனநிலை குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். மனை மற்றும் வாகன விஷயத்தில் ஆர்வம் உண்டாகும். மகரம்: வயது மூத்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். எதையும் செய்து முடிக்கும் தன்னம்பிக்கை மேம்படும். வெளியூர் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். பண வரவில் இருந்த தாமதம் குறையும். கும்பம்: பார்வை சார்ந்த பிரச்னை குறையும். உத்தியோக பணியில் மதிப்பு மேம்படும். பொன், பொருள் சேர்க்கை சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மீனம்: வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். செய்யும் செயலில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். வீட்டில் நிம்மதியான இல்லாத சூழல் நிலவும்.

தொடர்புடைய செய்தி