
அதேபோல், மணவூர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் சென்று வர லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஜல்லிக் கற்கள் சிதறி, ஆங்காங்கே பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்த இந்த தார்ச்சாலையை சீரமைக்க, திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.