கும்மிடிப்பூண்டி: ஏரியில் கட்டப்பட்டிருந்த 7 கடைகள் இடித்து அகற்றம்

85பார்த்தது
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஏழு கடைகளை இடித்து அகற்றிய வருவாய்த் துறையினர் திருவள்ளூர் மாவட்டம் ஜி எம் டி சாலையோரம் பெட்டிக்குப்பம் ஊராட்சியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பேத்திக்குப்பம் கிராமத்தில் தாமரை ஏரி, ஒட்டிய ஏரி, உள்வாய் வகையைச் சேர்ந்த 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதில் 7 கடைகள், 16 வீடுகள் இருந்தன. 

வருவாய்த்துறை நீர்வள துறை அதிகாரிகள் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை ஜெசிபி கொண்டு இடித்து அகற்றினர். உணவகம், பஞ்சர் கடை, காய்கறி கடை உள்ளிட்ட 7 கடைகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 16 வீடுகளுக்கு மட்டும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி