திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் அலமாதி ஊராட்சியை சேர்ந்த 50 ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி 1000க்கும் மேற்பட்டோர் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட அவர்கள் தமிழக முதலமைச்சரிடம் மனு அளிக்க அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மூட்டை கட்டி கொண்டு கோட்டையை நோக்கி நடை பயணமாக சென்று மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த சோழவரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வருவாய்த் துறையினர் மூலம் சமரசம் மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். அரசு தலையிட்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் வீட்டுமனை பட்டா வழங்க உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.