இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது!

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது என தமிழ்நாடு அரசு பெருமிதம். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் விளையாட்டுத்துறைக்கு ₹1,000 கோடிக்கு மேல் வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட், மகளிர் டென்னிஸ், ஸ்குவாஷ், ஹாக்கி, கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு ₹87.61 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது" என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி