'நிபா வைரஸ்' - சிறப்பு காலெண்டரை தயாரிக்கும் கேரள அரசு

74பார்த்தது
'நிபா வைரஸ்' - சிறப்பு காலெண்டரை தயாரிக்கும் கேரள அரசு
நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக கேரள கால்நடை பராமரிப்புத் துறையினர் முதற்கட்ட ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் வௌவால்களின் வாழ்விடங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் குழுக்கள் தற்போது ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் வௌவால்களில் நிபா வைரஸ் இருக்கிறதா என்பது கண்டறியப்படும். நோய் மீண்டும் பரவக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வௌவால்களுக்கு பரிசோதனை உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், நிபா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு பிரத்யேக காலண்டர் தயாரிக்கப்படுகிறது. இது மே முதல் செப்டம்பர் வரை திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், தீவிர நோய் பரவும் அபாயம் மற்றும் ஆண்டு முழுவதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டு இருக்கும்.

தொடர்புடைய செய்தி