வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நிறைவு

74பார்த்தது
வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நிறைவு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தோள் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு இன்று (மே 29) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. வைகோவுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்

ஆகவே, மதிமுகவினர் வைகோவை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.


-

தொடர்புடைய செய்தி