100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மின்னல் வேக நடனம்

புதுச்சேரி தேர்தல் துறை 100 சதவீதம் வாக்குபதிவு மற்றும் நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஆடல்-பாடல் இதில் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி திடல், ரெயில் நிலையம், அண்ணாசாலை மற்றும் கார்கில் நினைவிடம் உட்பட 7 இடங்களில் பாடலுடன் நடன குழு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி புதுவை மாநில விலங்கான அணில் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்ட மாநில அதிகாரி டாக்டர் கோவிந்தசாமி, நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி சதீஷ்குமார் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி