மகளிர் போற்றும் அரசாக திராவிட அரசு திகழ்கிறது - உதயநிதி

52பார்த்தது
மகளிர் போற்றும் அரசாக திராவிட அரசு திகழ்கிறது - உதயநிதி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து உதயநிதி இன்று பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், தற்போது தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என மகளிர் போற்றும் அரசாக நம் திராவிட மாடல் அரசு திகழுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி