கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்த பெண் ஒருவர் தற்போது மிகுந்த சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸை சேர்ந்த அல்மா என்ற பெண் கர்ப்ப காலத்தில் காட்டு பூனை இறைச்சியை சாப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு முகம் உட்பட உடல் முழுவதும் அடர்த்தியான முடி வளரத் தொடங்கியுள்ளது.
மருத்துவர்கள் இதை 'Worwolf syndrome' என்று அழைக்கிறார்கள். அல்மா தற்போது சிகிச்சைக்காக நன்கொடையாளர்களிடமிருந்து நிதி சேகரித்து வருகிறார். காட்டு பூனை இறைச்சியே இந்த நிலைக்கு ஆளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.