பாமக வேட்பாளரை ஆதரித்து சினிமா நடிகை பிரச்சாரம்

72பார்த்தது
பாமக வேட்பாளரை ஆதரித்து சினிமா நடிகை பிரச்சாரம்
பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அமமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமமுக கொள்கை பரப்பு செயலாளரும் சினிமா நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி, கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'எடப்பாடி பழனிசாமி ஒற்றை விரலால் ஓங்கி அடிக்க சொன்னார். ஆனால் தமிழ்நாடு மக்கள் அத்தனை விரல்களாலும் எடப்பாடி பழனிசாமியை ஓங்கி அடித்து விரட்டப் போகிறார்கள். இந்த திராவிட மாடல் ஆட்சியில் கரண்ட் பில், கரண்ட் ஷாக் அடிப்பது போல் வேகமாக ஏறுகிறது. தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற பெண்கள் முடிவெடுத்து விட்டனர்' என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி