மஞ்சுமெல் பாய்ஸை விட்டு வைக்காத இளையராஜா

மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் வெளியான படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. இந்த படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் (மே 22) வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி