UGC NET - விண்ணப்பங்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

84பார்த்தது
UGC NET - விண்ணப்பங்கள் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்
யுஜிசி நெட் ஜூன்-2024 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விண்ணப்பங்களின் திருத்தம் நாளை (மே 23) இரவு 11:59 மணி வரை அனுமதிக்கப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது. ஏதேனும் தவறுகள் இருப்பின் UGC NET இணையதளத்தில் திருத்தம் செய்து திருத்தப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த யுஜிசி நெட் தேர்வு 531 மையங்களில் 83 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும், இதற்கான தேர்வு ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி