5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

81பார்த்தது
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மே 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும். இதன் இன்று (மே 23) தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி