வாகனங்களில் மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி

77பார்த்தது
வாகனங்களில் மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி
தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்தது. இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (மே 22) மருத்துவர்கள் ஸ்டிக்கர் ஒட்ட நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி