அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியைச் சேர்ந்த தர்(60), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி(59) என்பவரின் உதவியுடன் போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் தேதி ஆள்மாறாட்டம் செய்த கலைச்செல்வியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி தரை போலீசார் தேடி வந்தனர். கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த தரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுபோல் பலவேறு நில மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
'அதிமுக வாக்குகளை, தங்கள் வாக்குகளாக காட்ட பாஜக முயற்சி' - திருமா கருத்து