ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று (ஏப்ரல் 13) காலை நடந்த கார் விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக லக்னோவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் காரில் சென்றனர். அப்போது, முன்னால் வந்த கனரக லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் 35 வயது பொறியாளர், அவரது பெற்றோர், மனைவி, 6 மாத மகள் என அடையாளம் காணப்பட்டது. தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.