இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 74 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அடுத்ததாக கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா & உ.பி.யில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 கல்லூரிகள் உள்ளன. அதேநேரம் MBBS இடங்களில் 11,745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்திலும், 11,650 இடங்கள் கொண்ட தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளன.