“விஜய் கூறுவது 2025ன் சிறந்த நகைச்சுவை” - ராஜேந்திர பாலாஜி

52பார்த்தது
“விஜய் கூறுவது 2025ன் சிறந்த நகைச்சுவை” - ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “அதிமுக-பாஜக என்பது ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட கூட்டணி. திமுக, தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறுவது 2025ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை. நான், நான் என்று சொல்லக்கூடாது. அவர்கள் களத்திலேயே இல்லை, எங்கேயும் கிடையாது. களத்தில் நிற்பது திமுக அணியா, அதிமுக அணியா என்பதுதான். அதிமுக அணியில் இன்னும் பல கட்சிகள் சேரும். மாதாமாதம் வந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் இனி நிகழும்” என்றார்.

தொடர்புடைய செய்தி