சென்னையிலிருந்து 3 நாட்களில் 3,32,695 பேர் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. வார விடுமுறை, தமிழ் புத்தாண்டையொட்டி, ஏப்.11ஆம் முதல் ஏப்.13ஆம் அதிகாலை 2 மணிவரை 6,049 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பௌர்ணமி தினத்தையையொட்டி, ஏப்.12 அன்று சென்னையிலிருந்து தி.மலைக்கு 877 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.