ஒரே பிரசவத்தில் 3 குட்டிகளை ஈன்ற பசு!

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையத்தில் பசுமாடு ஒன்று 3 கன்றுகளை ஈன்றது. செல்லதுரை என்ற விவசாயி, 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை அவரது விவசாய தோட்டத்தில் கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த கால்நடைகளில் ஒரு பசு மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இரண்டு கிடாரி கன்றுகளையும், ஒரு காளை கன்றையும் ஈன்று பசுமாட்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி