காஷ்மீர்: ரஜோரி மாவட்டம் பதால் கிராமத்தில் கடந்த சில நாட்களாக 17 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பதால் கிராமத்தை 3 மண்டலங்களாக பிரித்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. 17 பேரின் மரணத்துக்கு விடை தெரியாததால் பதால் கிராமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த காஷ்மீரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.