தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பிரக்கோலி, நூற்கோல் ஆகிய உணவுகளை தவிர்த்து விட வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகள் தைராய்டு சுரப்பிக்கு செல்லக்கூடிய அயோடினை தடுத்து நிறுத்துகின்றன. இவற்றை முறையாக சமைத்து சாப்பிடும் பொழுது இந்த பிரச்சனை ஏற்படுவதில்லை. இருப்பினும் தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் மேற்கூறிய காய்கறிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுப்பது நல்லது.