பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை எண்ணற்ற பலன்களை கொடுக்கும். வெளிநாடுகளில் மொரிங்கா என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. முருங்கை இலைகளை அரைத்துப் பொடி ஆகவும் எண்ணெய் தயாரித்தும் பயன்படுத்தலாம். முருங்கை பொடி உடலுக்குத் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களையும் வழங்குவதோடு உடலின் வளர்ச்சிக்கும் உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயத்தை பலமாக்கும்.