காலை எழுந்ததும் எலுமிச்சை சாறை சுடுதண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். 8 மணிக்கு பழங்கள் மட்டும் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். கொய்யா, தர்ப்பூசணி, பப்பாளி, மாதுளை சாப்பிடலாம். 11 மணிக்கு கிரீன் டீ. மதியம் தானியங்கள், வரகு, காய்கறிகள். மாலை சர்க்கரை பால் சேர்க்காத தேநீர். இரவில் வெண்டைக்காய், அவரைக்காய், பீன்ஸ் போன்றவற்றை பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும். பசி எடுக்கும் நேரத்தில் பாதாம், மக்கானா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.