இந்தியாவில் ரயில் விபத்துக்கள் தொடர்கதை ஆகி வந்தாலும் 2024-ல் அதிக ரயில் விபத்துகள் ஏற்பட்டது. சுமார் 25-க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் 2024 நடைபெற்றுள்ளன. ஜம்தாரா ரயில் விபத்து, ஹௌரா மும்பை பயணிகள் விரைவு ரயில் விபத்து, கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து, பாகமதி ரயில் விபத்து உள்ளிட்ட விபத்துகளில் 17 பேர் பலியாகி உள்ளனர். 71 பேர் படுகாயமடைந்தனர். 2025-ம் ஆண்டு துவக்கத்திலேயே மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர்.