செங்கல்பட்டு: மேலச்சேரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் - ஜாய்ஸ் தம்பதியின் குழந்தை அகஸ்டின் (1) நேற்று (ஜன. 22) காணாமல் போனது. அப்போது வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த வாளியில் அகஸ்டின் தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜாய்ஸ் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.