தமிழ் பெருமை குறித்து கனிமொழி எம்பி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “இரும்பின் வலிமையை ஒத்தது புன்னைமரம் என்கிறது எட்டுத்தொகையில் முதல்நூலான நற்றிணை. நமது இலக்கியங்கள் எடுத்தியம்புவது போல், தமிழ் நிலத்திலிருந்தே இரும்பின் காலம் தொடங்கியதாக புதிய ஆதாரங்களை உலகிற்கு வழங்கியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் என்பதில் ஒவ்வொரு தமிழரும் பெருமைகொள்ளும் உணர்ச்சிமிகு தருணமிது” என தெரிவித்துள்ளார்.