

VIDEO: மேடையில் பாடும் போதே உயிரிழந்த பிரபல பாடகர்
துருக்கியின் பிரபல பாடகர் வோல்கன் கோனக், மேடையில் பாடும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது, பாடிக்கொண்டிருந்த வோல்கன் கோனக் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, ஃபமகுஸ்தா மருத்துவமனைக்கு வோல்கன் கொண்டுச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வோல்கன் மேடையில் மயங்கி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.