

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போர்டு ரெட்டியப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், வெடிவிபத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி: kumudamNews24x7