OpenAI-யின் GPT-4.o மேம்பட்ட புகைப்படங்களை உருவாக்கும் திறன் கொண்டது. இதில் ஒரு ஆப்ஷனாக இணைக்கப்பட்டது தான் 'ஜிப்லி'. சாட் ஜிபிடி பயனர்கள் ஜிப்லி ஸ்டுடியோவின் அனிமேஷன் புகைப்படங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். மென்மையான வண்ணங்கள், அதைவிட முக்கியமாக மனிதர்களின் உணர்ச்சிகளை மிகவும் துல்லியமாக காட்டுதல், இவையெல்லாம் கையால் வரையப்பட்டது போல் காட்சி தருவது ஜிப்லி கலைப்பாணியின் தனிச்சிறப்பு.