செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்தினால் கண் சோர்வு மற்றும் தூக்கம் கெடும் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால், போன், லேப்டாப், டிவி ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டெட்ராய்டில் உள்ள ஹென்றி ஃபோர்டு மருத்துவமனையின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நீல ஒளி கொலாஜன் புரதத்தை பாதிக்கிறது, இது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.