விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு வருவதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் விவசாயம் செய்து வரும் அவர், நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வருகிறேன். அதனால்தான் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதிஷாவில் உள்ள எனது விவசாய நிலத்தை பார்வையிட வருகிறேன். இந்த முறை தக்காளி, சாமந்தி பூக்கள், குடைமிளகாய் விளைச்சல் நன்றாக உள்ளது என கூறியுள்ளார்.