மெரினா உணவுத் திருவிழா: ரூ. 1.50 கோடிக்கு உணவுகள் விற்பனை

58பார்த்தது
மெரினா உணவுத் திருவிழா: ரூ. 1.50 கோடிக்கு உணவுகள் விற்பனை
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஊக்குவிக்கவும், பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உணவு திருவிழா கடந்த டிச. 20-ல் தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் 3.20 லட்சம் மக்கள் கலந்துகொண்டதோடு ரூ. 1.50 கோடி மதிப்பிலான உணவுகளை வாங்கிச் சென்றுள்ளனர். 45 அரங்குகளில் 286 வகையான சைவ, அசைவ உணவுகள் விற்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி