சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவிக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.