சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், "இந்த திட்டம் தொடங்கிய பிறகு 3,20,264 பேர் விபத்துகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்டனர். அரசு இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை ரூ. 280 கோடி" என்றார்.